காவிரி செல்வன் விக்னேஷின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் மன்னார்குடியில் நடைபெற்றது.
✍ | -ராஜாமதிராஜ்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணியின்போது அக்கட்சியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து மரணம் அடைந்தார்.
அவரது நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் மன்னார்குடியில் இன்று அனுசரிக்கப்பட்டது. மன்னார்குடி பெரியார் சிலை அருகே இன்று மாலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் அக்கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேதா பாலா,ராமஅரவிந்தன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments