இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 42,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கு இதுவரை 42,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில் இந்த சட்டத்தின் கீழ் உள்ள 1.15 லட்சம் இடங்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கியது.
தற்போதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments