Header Ads

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி!!!

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி செய்யப்பட்டதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

சென்னையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு V.காளிதாஸ் அவர்களின் தலைமையில் காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளனர். அதனை தொடர்ந்து மதியம் 02.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் மாநில பொது செயலாளர் திரு. கரு நாகராஜன் அவர்களின் தலைமையில் மனு கொடுக்க உள்ளனர். 

இதில் மாநில துணை தலைவர் M.சக்கரவர்த்தி அவர்களும், மாநில துணை தலைவர் திரு.M.N.ராஜா அவர்களும், மாநில செயலாளர் திருமதி. சுமதி வெங்கடேஷ் அவர்களும் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர். 

காலை 11 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. CP.ராதாகிருஷ்ணன் அவர்களும், சிவகங்கை மாவட்டத்தில் தேசிய செயலாளர் திரு H.ராஜா அவர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில துணை தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களும், திருப்பூர் மாவட்டத்தில் மாநில துணை தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் மாநில துணை தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையிலும் மனு கொடுக்க உள்ளனர். பிற மாவட்டங்களில் அங்குள்ள மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் மனு கொடுக்கப்பட உள்ளது.


No comments

Powered by Blogger.