Header Ads

புண்ணிய தியாகம் - சிறுகதை

  

✍️ | ஜெயஸ்ரீ பொன்னம்பலம். (இளம் எழுத்தாளர்.)

நாம் யாரும் கடவுளை நேரடியாக கண்டிருக்க மாட்டோம். ஆனால், கடவுளை நேரில் காண வைத்தது இந்த 2020 ஆண்டு. ஆம்! நம் அனைவரும் அறிந்ததே.

2020 ஆண்டு உலகையே உலுக்கிய கொரானா என்ற கொடிய நோய் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரையும் தன் வசம் இழுத்தது. உலகே திக்கற்று நின்றது. வீட்டு வாசலைத் தாண்டினாலே மரணம் என்ற நிலைக்கு தள்ளியது. ஆனால், அந்த மரணத்திற்கே சாவல் விட்டார்கள் நம் மருத்துவர்களும் செவிலியர்களும். இரவும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். அவரகளின் பங்களிப்பை வெறும் வார்த்தையால் அளவிட முடியாது.

அதில், ஒரு மருத்துவரின் தனிப்பட்ட பங்களிப்பு,

இரவு 10 மணியளவில் ஒரு ஃபோன் வந்தது. தூக்கக் கலக்கத்தில் ஃபோன் ‌எடுத்து, “ஹலோ! யாரது?” என்றுக் கேட்டேன். (அப்போது, அவர் முகத்தில் திடீரென ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது). உடனே எனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். 

இறுதியில், என் மருத்துவமனையை அடைந்தேன். வேகமாக உள்ளே சென்றேன். அப்போது செவிலியர் ஒருத்தர் வந்து, டாக்டர் ரூம்-241-ல் உள்ள அந்த பெரியவருக்கு மூச்சு திணறல் திடீரென அதிகமாக உள்ளது. ஆக்ஸிஜன் அளித்தும் குறைவதாக தெரியவில்லை, என்று கூறினார்.

(அதிக காய்ச்சலோடு வந்த வருக்கும் திடீரென எப்படி மூச்சுத்திணறல் வந்தது? என்று குழப்பத்தோடு)...

அந்த ரூம்க்குள் சென்று அந்த பெரியவரைப் பார்த்தேன். அவர் கண்களில் ஒரு ஏக்கம், என்னை எப்படியாவது பிழைக்க வைக்க மாட்டார்களா? என்று. ஆனால் அவர் உடலில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அந்த சமயத்தில் ஓர் யோசனை தோன்றியது, (என் நண்பன் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளான். அவனோ lung's specialist) அவனிடம் இந்த பெரியவரே அனுப்பினால் பிழைக்க செய்வான் என்று, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தேன்.

(மணி-2:40 சாமம்)

‌அரசு மருத்துவமனைக்குள் சென்று, அவரை தனியறையில் அட்மிட் ‌செய்தார்கள். பிறகு, அவருக்கு அனைத்து பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவு வரும் வரை அவருக்கு ஆக்ஸிஜன் மட்டுமே அளிக்கப்பட்டது.

அதிகாலை 4:17மணியளவில்.

அவரின்‌‌ பரிசோதனை முடிவுகள் வந்தன. அதை கண்டு நானும் என் நண்பனும் அதிர்ச்சிக்கு உள்ளானோம்.

(அதிர்ச்சியடையும் ‌படி அப்படி என்ன‌ முடிவுகள் வந்திருக்கும்?).

ஆம். உலகையே உலுக்கிய, கொரானாத் தொற்று அவருக்கு உறுதியாகி உள்ளது.அதுமட்டுமின்றி, அந்த ஊரில் முதல் தொற்று அவருக்கு‌ தான் உறுதி செய்யப்பட்டது.

[உடனடியாக, அரசு சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் குடும்பத்தையும் தனிமைப்படுத்தப்பட்டது.]

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் அவரைக் காண முன்னெச்சரிக்கை பாதுக்காப்புடன் ரூம்க்குள் நுழைந்தேன். அவர் என்னை ஏக்கத்துடன் பார்த்து, “சார், நான் பிழைத்துக் கொள்வேனா? என் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. எனக்கு 12 வயதில் மகள் தான் உள்ளார். நானும் இறந்துவிட்டால்; என் மனைவி தனிமரமாகி விடுவால், ஆகையால் என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று கண் கலங்க வேண்டினார்”. நான் அவரை, நோக்கி “ஐயா,உங்களுக்கு ஒன்றுமில்லை, சாதாரண ‌மூச்சு திரணரல் மட்டும் தான் நீங்கள், எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் சீக்கிரம் மீண்டு விடலாம்”, என்று அவருக்கு ஆறுதல் கூறி அறையே விட்டு வெளியே வந்தேன்.

சிறிது நாட்கள் கழிந்தன. அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. கொஞ்ச கொஞ்சமாக குணமடைந்தார். அவர் வீட்டுக்கு செல்ல எங்கள் மருத்துவக்குழு‌ ஒருசில நிபந்தனைகளுடன் அனுமதித்தது.

அவர் முகத்தில் மிகுந்த ஆனந்தம். என்னை நோக்கி, “இரு கைகளையும் கூப்பி வணங்கினார்”. பத்திரமாக இருங்கள்‌ என்று‌ ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்,

அன்பு மனைவியையும், கண்ணக்குழியுடன் தவழ்ந்து வரும் நம் மகளையும் கண்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது. இருவரும் எனக்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருப்பார்கள். (மனதிற்குள் நினைத்துக் கொண்டு) என் நண்பனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றேன்.

வீட்டிற்குள் சென்று முதலில் நன்றாக குளித்துவிட்டு அறைக்குள் நுழைந்தேன். அடுத்த அறையில் என் மனைவியும், என் குழந்தையும் என்னைக் கண்டனர். என் மகள் என்னிடம் வரவேண்டும் என்று ஒரே அழுகை. ஆனால் நான் தனிமையில் தான் இருக்க வேண்டும். அவளை தொட்டுத் தூக்கி 40 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் என்று மனதை தேற்றிக்கொண்டேன். அன்றிரவு தூங்கினேன்.

அடுத்த நாள் காலையில், என்‌‌ மனைவியும், என் மகள் தூங்குவதையும் கண்டுப் பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன்.

மூன்றாம் நாள் காலை,

டாக்டர் வீட்டு கதவை சிலர் தட்டினர். மனைவி வந்து கதவை திறந்தால். ஓர் அதிர்ச்சி செய்தி, என்னவென்றால் அவரின் கணவருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருந்தது. அதனால் அவளையும், குழந்தையையும் தனிமைப்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். அவரை காணக்கூட‌ முடியாமல் மனைவித் தவித்தாள்.

சிறிது நாட்களுக்குப் பிறகு,

மருத்துவர்கள் அவரை கைவிட்டனர். அவரின்‌ இறப்பு அவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் மனைவி மனம் உடைந்து போனால், “நம் குழந்தையின் முகத்தைப் கூடப் பார்க்க முடியாமல்,எங்களை தனியாக விட்டு சென்று விட்டீர்களே, என்று கதறி அழுதால். அவரின் முகத்தைக் கூட‌ப் அவளால் பார்க்க முடியவில்லை.அவரின் உடல் யாரும் பார்க்க‌ முடியாத முறையிலே அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவ உலகமோ அவரின் இறப்பைப் கேட்டுத் திக்கற்று‌ நின்றது.

[இதைப்போல் தான் ஒவ்வொருவரும்‌ நமக்காக இரவும் பகலும் உயிரைக் கொடுத்து உழைக்கின்றனர். ஆனால் நாமோ அதைப் பற்றி நினைக்காமல் நம் உல்லாசத்திற்காக ஊரை சுற்றுகின்றோம். அரசையும் குறை கூறுகின்றோம். ஆனால் அவர்கள் சொல்லுவதற்கு நம் செவி சாய்ப்பதே இல்லை.]

கருத்து:

தன் நலத்தைப் பற்றி மட்டும் என்னாமல் பிறர் நலத்தையும் எண்ணுங்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள். மருத்துவ மற்றும் அரசுத் தரப்பில் சொல்வதற்கு செவிகுடுங்கள்.

“நம் நலம் நம் கையில்”

1 comment:

Powered by Blogger.