55வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.
✍️ | ராஜாமதிராஜ்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளருக்கு மீண்டும் வேலை வழங்கிடவும் மற்றும் கொரானா கால நிவாரண தொகை வழங்கிட வலியுறுத்தி தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்த இந்த போராடத்தில் சுமார் 100 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமயில் , காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் செங்கோட்டை தாலுகா கிளை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் 55 வயது மேற்ப்பட்டவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் அல்லது வேறு தொழில்கள் இல்லாத நிலையில் வாழ்வாரத்தினை கருத்தில் கொண்டு சட்டபடி வழங்க வேண்டிய வேலையில்லா கால நிவாரண தொகை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேற்படி கோரிக்கை விபரம் தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்களுக்கு உரிய முறையில் இன்றுமேற்படி கோரிக்கை விபரம் தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்களுக்கு உரிய முறையில் இன்று சமர்ப்பிக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. இதனால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
No comments