இந்தியர்களுக்கு பிளிப்கார்டில் 70,000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு......
✍️ | மகிழ்மதி.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே சென்றாலும், வரவிருக்கும் பண்டிகை தினங்களில் தேவை மீட்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல துறைகளிலும் நிலவி வருகின்றது.
இதனால் ஒவ்வொரு துறையினரும் சுறுசுறுப்பாக பண்டிகை நாட்களையொட்டி, தங்களது வியாபாரத்தினை மேம்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்தியாவினை பொறுத்தவரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் தொடங்க விருப்பதால், ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதற்கேற்றவாறு தயாராகி வருகின்றன.
70 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு அந்த வகையில் வால்மார்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனம் வர விருக்கும் பிக் பில்லியன் டேவிற்காக தயாராகி வருகின்றது எனலாம்.
சற்று முன்னதாக அமேசான் நடப்பு ஆண்டில் மீண்டும் 1 லட்சம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும் அது அமெரிக்கா கனடாவில் தான். ஆனால் மற்றொரு ஆன்லைன் ஜாம்பவான் ஆன பிளிப்கார்ட் நிறுவனம் அதன் பிக் பில்லியன் டேவினால், 70,000 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த 70 ஆயிரம் வாய்ப்புகளானது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் எனவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் விநியோக சங்கிலியின் காரணமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளது.
அதோடு பிளிப்கார்டின் விநியோக சங்கிலியால் நேரடியாக பல ஆயிரம் பேர் பயனடைவர். குறிப்பாக டெலிவரி எக்ஸ்கியூடிவ்ஸ், பேக்கேஜிங், உள்ளிட்ட துறையில் பல வாய்ப்புகள் உள்ளது. அதே வேளையில் பிளிப்கார்டின் விற்பனையாளர், கூட்டாளர்கள், கூட்டாளர் இருப்பிடங்களில் வேலை மற்றும் கிரானாக்களில் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
No comments