முக்கிய செய்திகள்
* அண்ணா திராவிடப் பெருங்கனவு கண்டு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர். சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கியவர் அண்ணா. அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர் அண்ணா. -கமல்ஹாசன்
* பீகார் மாநிலம் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! மதுரை எய்ம்ஸில் இடம் கிடைக்கவில்லை என்றால் உதான் திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு விமானம் பிடித்து பீகார் சென்று சிகிச்சை பெறலாம்.
* சட்டபேரவையில் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது..! கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம்.
* சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை நீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு.
* மாணவர்கள் ஏ4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம். இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் இல்லை. 18 பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதி அனுப்பி வைக்க வேண்டும். - சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு.
* முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் கைது.
* சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில், காய்கறி வாங்கியதில் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்தது தொடர்பாக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
* 5 மாதங்களுக்கு இ.எம்.ஐ.களில் சாலை வரி மற்றும் நலன்களை தள்ளுபடி செய்யக் கோரி, டிரைவர்கள் சங்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஒரு எதிர்ப்பாளர் கூறுகிறார், "பூட்டுதல் காரணமாக கடந்த 5 மாதங்களில் நாங்கள் எதையும் சம்பாதிக்கவில்லை, ஆனால் நிறுவனங்கள் ஈ.எம்.ஐ.களைக் கேட்கின்றன, நாங்கள் எவ்வாறு செலுத்த வேண்டும்?.
* அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை. விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிப்பு.
* அரசு மருத்துவர்கள் பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ள தகுதிக்கேற்ற DACP ஊதியத்தை வழங்கிட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதம் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை நோக்கி பேரணியில் எழுச்சியுடன் பங்கேற்றனர். அரசு செவி சாய்க்கவில்லை. தற்போது கொரொனா தொற்று நோய் அசாதாரண சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு தமிழகஅரசு நீண்ட நாள் கோரிக்கைகளான DACP ஊதியம் மற்றும் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இவற்றை நடந்து வரும் சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்து மேலும் உற்சாகமாக பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும்
* காஷ்மீர் எல்லையில் 9 மாதத்தில் 3,186 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. - மத்திய அரசு.
No comments