பல்வேறு மாவட்டங்களில் நடந்த லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை ராயபுரத்தில் 3 வயது குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாநிலத் தம்பதியரின் குழந்தையை கடத்தியது யார் என்று சி.சி.டி.வி. உதவியுடன் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
இன்று (08.09.2) நடைபெற உள்ள பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி மாதா கொடியிறக்க விழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என தேவாலயம் சார்பில் வேண்டுகோள்.
சென்னையில் புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது
பாண்டி பஜார் தியாகராய சாலையில் ரூ.40.79 கோடி மதிப்பில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் ; அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறதுஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்.
வேலூரில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , பாதிப்பு எண்ணிக்கை- 17,110
விருத்தாச்சலம் அருகே கார் மீது மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து.
4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய சோகம்!
திண்டுக்கல், தேனி மாவட்ட காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை- திண்டுக்கல் சரக DIG முத்துசாமி உத்தரவு.
No comments