மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை செய்ய காமுகர்களுக்கு போலீசார் வலைவீச்சு...
✍️ | ராஜாமதிராஜ்.
காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 50வயதான மூதாட்டி சாந்தி திருமணமாகாதவர் .இவர் தினமும் வயல் வேலைக்குச் சென்று ஆடு மேய்க்கும் வேலை பார்ப்பது அவரது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் தனது கிராமத்தின் ஓரத்தில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார்.
அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்றனர். ஆளில்லாத இடம் வந்ததும் சாந்தியை மர்ம நபர் வாயை பொத்தி ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு மூதாட்டி என்றும் பாராமல் காம கொடூர்கள பாலியல் வன்புணர்வு செய்தனர். பின் மூதாட்டியை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மூதாட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டுசென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு கொலையாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
No comments