போதைக்காக சானிடைசரை குடித்துவந்தவர் ரெத்த குழாய் வெடித்து உயிரிழப்பு...
✍️ | ராஜாமதிராஜ்.
கும்பகோணம் பெருமான்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் இவர் கடந்த 5 மாதங்களாக வேலை இன்றி தவித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் கையில் பணம் இல்லாததால் இலவசமாகக் கிடைத்த கை கழுவ பயன்படும் கிருமிநாசினியான சானிடைசரை கடந்த 3 மாதங்களாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போதை அதிகமாக கிடைப்பதாக நினைத்துக்கொண்டு கர்ணன் சனிடைசர் குடித்த வந்ததால் உள் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தக் குழாய் வெடித்து நேற்று உயிரிழந்தார்.
No comments