மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேளாண் சட்டங்களை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
✍️ | ராஜாமதிராஜ்.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சை நாகை திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் சட்டங்களைக் கண்டித்து சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் பின்னர் வேளாண் சட்டம் குறித்த சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினர்.
இதில் காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments