உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம் பெற்ற மோடி...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியதாக டைம் பத்திரிகை விமர்சனம்...
‘டைம்’ பத்திரிகையின், உலகின் சக்தி வாய்ந்த டாப் 100 நபர்கள் – 2020, பட்டியலில், பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் இடம் பெற்று அசத்தி உள்ளனர். டைம் பத்திரிகை உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ், ஜெர்மன் அதிபர் மெக்கெல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுந்தர் பிச்சை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி மட்டுமே. ஆனால் மோடி பற்றி குறிப்பிட்டுள்ள டைம், இந்துத்துவ மனப்பான்மையுடன் அவர் செயல்படுவதாக விமர்சித்துள்ளது.
மேலும், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
இப்பட்டியலில் பிரதமர் மோடி தவிர, இந்தியாவிலிருந்து நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஷாஹீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயது மூதாட்டி பில்கிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிரிட்டனில் எய்ட்ஸ் நோயாளியை குணமாக்க முக்கிய பங்காற்றிய டாக்டர் ரவீந்திர குப்தாவுக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
No comments