மணல் கடத்தலில் ஈடுபடுவோர், லாட்டரி டிக்கெட் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலசரவணன்
✍️ | ராஜாமதிராஜ்.
கரூர் மாவட்டத்தில் இருந்து இரு சக்கர வாகனம் திருடிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வருவதாக கரூர் மாவட்ட காவல் துறையில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.
மேலும் இலுப்பூர் மற்றும் குழிபிறை ஆகிய பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை கே.டி.எஸ் டி ராஜேந்திரன் தலைமையில் 19 பேர் கொண்ட குழு மாவட்டத்தில் அதிரடியாக நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுக்கோட்டை மாலையீடு அருகே வந்த 3 இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அவர்கள் காவல் துறையினருக்கு நிற்காமல் வேகமாக பொன்னமராவதி பகுதியை நோக்கிச் சென்றனர் அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை சினிமா பாணியில் துரத்திச் சென்றனர்.
பொன்னமராவதி பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் சென்ற போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் தப்பித்துச் சென்றனர் வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் பிடிபட்டால் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தபோது அவர் கரூர் மாவட்டம் அருகம் பாளையத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது அவர்கள் மீது
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் சிறப்பாக திருடர்களை சுற்றி வளைத்து பிடித்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சினிமா பாணியில் துரத்திச் சென்று குற்றவாளிகளை கைது செய்த 19 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது
மேலும் கடந்த 2 மாதத்தில் 200 மணல் கடத்தல் வழக்குகள் போடப்பட்டு உள்ளது மேலும் அதிக அளவில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் லாட்டரி டிக்கெட் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்.
No comments