குளச்சல் துறைமுகத்தில் கடல் சீற்றம்..... கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.!
✍️ | ராஜாமதிராஜ்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுக பகுதிகளில் 300 விசைபடகுகள் 1000க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் பைபர் வள்ளங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 45கி.மீ முதல் 55கி.மீ வரை சூரைக்காற்று வீசும் என்பதால் குமரி மீனவர்கள் 10ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் சூரைக்காற்று வீசி வருகிறது. இதனால் அதிகாலை முதல் கடல் சீற்றமாக காணப்படுகிறது கடலில் கட்டுமரங்களை செலுத்த முடியாததால் குளச்சல் கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு மண்டைக்காடுபுதூர் ஆகிய சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கட்டுமரங்கள் பாதுகாப்பாக மேட்டுப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
No comments