நெல்லை- வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருத்தாங்கலில் ஆவணி திருவிழா
✍️ | ராஜாமதிராஜ்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த கங்கணான்குளம் அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி - வேலியார்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் நாராயண சுவாமி திருத்தாங்கலில் ஆண்டுதோறும் ஆவணி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 4 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தர்மம், திரு ஏடுவாசிப்பு, சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, அன்னதர்மம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
விழா நிறைவு நாளான நேற்று நள்ளிரவில் அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
இதில் திருவிருத்தான்புள்ளி, வேலியார் குளம், கங்கணான்குளம், சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அன்புக்கொடி மக்கள், பக்தர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை திருத்தாங்கல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments