தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.கே., செங்கோட்டையன் அவர்களின் சகோதரர் மகன் செல்வம் இன்று திமுக., வில் இணைகிறார்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* தமிழகத்துக்கு வர இ-பாஸ் தேவை என்பதை ரத்து செய்ய கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரிஹரசுதன் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* சென்னை மெரினா கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* நியாய விலைக்கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் 34,54,692 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை!
* தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!
* தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது..! மறு தேதி அறிவிக்கப்படாமல் பேரவை கூட்டத்தை நிறைவு செய்தார் பேரவைத் தலைவர் தனபால்.
* பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும். - திமுக எம்.எல்.ஏ. பொன்முடி.
* "2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவுமில்லை" - தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே விளக்கம். திமுக எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில். 2ஜி சேவையை கைவிடுவது தொடர்பாக தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை. எந்த தொழில்நுட்பத்துடன் தகவல் தொடர்பு சேவையை வழங்குவது என்பது தொலைபேசி சேவை நிறுவனங்களின் விருப்பம்.
* தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.கே., செங்கோட்டையன் அவர்களின் சகோதரர் காளியப்பனின் மகன் செல்வம் இன்று மாலை 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக., வில் இணைகிறார். இடம் அண்ணா அறிவாலயம்.
* 2018-ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்! நாடு முழுவதும் 697 பேர் கைது செய்யப்பட்டு, 406 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!.
* கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. - மத்திய உள்துறை அமைச்சகம்.
* பாஐக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்னன் தனக்கு கொரோனா இருப்பதாக பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* சட்டப்பேரவை - 3ஆவது நாள் கூட்டத்துடன் இன்று நிறைவு.
* பவானிசாகர் அணை : நீர்மட்டம் - 100.15 அடி, நீர் இருப்பு - 28.8 டிஎம்சி, நீர்வரத்து - 2,967 கனஅடி, நீர் வெளியேற்றம் - 2,950 கனஅடி.
* செப்டம்பர் 21ஆம் தேதி முதல் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். -ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.
* முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
* அரியர் மாணவர்களின் அரசன் முதல்வர் பழனிசாமி!" - பேரவையில் எம்.எல்.ஏ. கருணாஸ் புகழாரம்.
* அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்: பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல். தனது அபராத தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
* சுதந்திரப் போராட்ட வீரரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவருமான திரு. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்! -டிடிவி தினகரன்.
No comments