பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
✍ | -ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் ராம் அரவிந்தன், தொகுதி செயலாளர் வேதா பாலா, மாநில மகளிரணி பாசறை செயலாளர் காளியம்மாள் மன்னார்குடி தொகுதி துணை தலைவர் அருள் அழகன், தொகுதி இணை செயலாளர் சரி குமார், தொகுதி செயலாளர் ஜோசப் தினேஷ்,தொகுதி தலைவர் தீபா சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை கண்டித்து விவசாயிகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தனியார் பள்ளி முழுமையாக அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் கடன் வசூல் செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments