முக்கிய செய்திகள்
* கோவை, நாகை, கரூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, விருதுநகர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை உடனடியாக தொடங்க ஆணை...!
கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து, முதற்கட்டமாக 5 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் உத்தரவு.
* இன்று பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, 84.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து, 78.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் என்று அரசு அறிவித்தப்பிறகும் நீண்ட நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளது.
* விழுப்புரம் முக்கிய அலுவகத்திற்கு செல்லும் பாதை குண்டும் குழியூமாக உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் வளாகத்திற்குள் அனைத்து முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது உடனடியாக மாவட்டத்தலைவர் அவர்கள் கவனம் செலுத்தி விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் விழுப்புரம் மாவட்ட மக்களின் கோரிக்கை.
* வீடு புகுந்து 5 பவுன் நகை ரூ.1.30 லட்சம் திருட்டு
பவானி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை, பணம் திருடிய சம்பவம், மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பவானி அருகே துருசாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 65; மகனுடன் நேற்று கோவிலுக்கு சென்றார். மனைவி கால்நடைகளை மேய்க்க, தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் மதியம் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த, 1.30 லட்சம் ரூபாய், ஐந்து பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி பவானி போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.
* எம்.ஜி.ஆா். சகோதரா் மகன் மறைவு: அதிமுக இரங்கல்.
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் சகோதரா் மகன் மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிமைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் சகோதரா் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (75) கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றோம்.
சந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்.
* அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்: எம்.ஜி.சக்ரபாணியின் மகன் சந்திரன் காலமானாா் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.
*இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
* இன்று வைகைப்புயல் வடிவேல் அவர்களுக்கு 60ம் ஆண்டு இனிய பிறந்தநாள் (12 Sep 1960). இணைய வாசிகள், மீம் கிரேட்டர்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
* நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோரையார்குளத்தில் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் 2 வயது பெண் சிறுத்தை சிக்கியது.
* அரக்கோணம் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவு. வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை. சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு.
* மார்ச் மாதத்துக்கு பிறகு முதன்முறையாக ஜீரோ (0) கொரோனா உயிரிழப்பு பதிவு-கனடா அரசு.
* தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா!
* வெளி மாநில போக்குவரத்து இல்லாததால் ‘ஆர்டர்கள்’ குறைந்தன: சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணி பாதிப்பு.
* பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கையை நிறுத்தி வைக்க உத்தரவு.
* போலி விவசாயிகளால் நல்ல திட்டம் நிறுத்தி வைப்பு... துணை போன அதிகாரிகள் அதிரடி இட மாற்றம்!
* இன்று (12-9-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - (மறைந்த) விருத்தாசலம் முன்னாள் கழக சட்டமன்ற உறுப்பினரும், கழக தீர்மானக்குழுச் செயலாளருமான திரு. குழந்தை தமிழரசன் அவர்களது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.
No comments