கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி...
✍️ | ராஜாமதிராஜ்.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும்.
இந்த திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை கிருத்திகை தினம் முருகனுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு- பால், பழம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தங்கவேல் -தங்கக்கவசம் அணிந்து மூலவர் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மலைக்கோயில் உற்சவர் சண்முகநாதர் சிவப்பு பட்டு உடுத்தி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு வெள்ளி கவசம் புஷ்ப மாலைகள் அணிவிக்கப்பட்டு ,
காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் முருகப்பெருமானுக்கு உகந்த தினம் என்பதால் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளனர்.
No comments