Header Ads

பல்வேறு மாவட்டங்களில் நடந்த லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!

 

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

செப்டம்ர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் மத்திய அரசு  அறிவித்துள்ளது.

தாஜ்மஹாலில் தினமும் 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முகக்கவசம் அணிய வேண்டும். தாஜ்மஹால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும்.

நாளை முதல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் - மாவட்ட நிர்வாகம்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் 72 மணி நேரத்திற்கு முன் கொரனா பரிசோதனை கட்டாயம்.

100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார்:

34 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது பள்ளிக்கல்வித் துறை.

74 பள்ளிகள் மீது பெற்றோர் அளித்த புகார் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை.

ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூ​சி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்

கிசான் திட்டம் - ரூ.110 கோடி மோசடி முறைகேட்டில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரியர்ஸ் விவகாரம் : "அரசு கருத்தே அதிகாரப்பூர்வமானது" - அமைச்சர் ஜெயக்குமார்.

No comments

Powered by Blogger.