மன்னிப்பு கேட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச்...
✍️ | ராஜாமதிராஜ்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.இதில் ஏழாவது நாளாக நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவரும் செர்பியா நாட்டு வீரருமான ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டு வீரர் பாப்லோ கரேனோ வை எதிர் கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர் தனது செர்வில் கேம் புள்ளிகளை இழந்த ஜோகோவிச் 5 க்கு 6 என்ற கணக்கில் பின் தங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோகோவிச் தான் வைத்திருந்த பந்தை மட்டையால் பின் நோக்கி அடித்தார். அது லைன் பெண் நடுவரின் தொண்டையில் தாக்கியது நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதுதொடர்பாக டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவர் மீது பந்தை அடித்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 33 வயதான செர்பிய நாட்டு வீரர் ஜோகோவிச் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடைய வைத்திருப்பதுடன் வெறுமையாகவும் ஆக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். தான் எதேச்சையாக தான் அடித்தேன் பந்து நடுவர் மீது பட்டதும் ஓடிச்சென்று அவரை பார்த்தேன் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அறிந்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த தகுதி நீக்கத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஒரு வீரனாகவும் மனிதனாகவும் என்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன். களத்தில் நான் நடந்து கொண்ட விதத்திற்காக போட்டி அமைப்புக் குழுவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஜோகோவிச் பதிவிட்ருந்தார்.
No comments