வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
✍️ | ராஜாமதிராஜ்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் திருத்த சட்டங்களை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அதன் கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தி. ஆர். பி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments