Header Ads

டி - சர்ட்டில் எழுதினால் தமிழ் வளராது... தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்..... வானதி சீனிவாசன்.

 


✍️ | ராஜாமதிராஜ்.

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசடி நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க சார்பில் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் இன்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமரின் வேளாண்மை நிதி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். டீ சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. திமு க வினர் டீசர்ட்டில் தமிழ் வளர்ப்பதை விடுத்து தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை  முன்னெடுக்க வேண்டும்.

மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கத்தான் செய்கிறது. ஆனால் மும்மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகளோடு மேலும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதற்கு பாஜக வாழ்த்து தெரிவிக்கும். அது வரவேற்பாக மாறுமா என்பதை காலம் தான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.