Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றி 500-க்கும் மேற்பட்டோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லி: மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அண்ணா இயற்றிய இருமொழி கொள்கை உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளதாக பேரவையில் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
டிக் டாக் போல புதிய வீடியோ பகிர்வு தளத்தை அறிமுகப்படுத்தியது கூகுள்

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் காணொலி ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு. தியேட்டர் திறப்பு, ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு குறித்து ஆலோசிக்கவிருந்த நிலையில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இந்த வார இறுதி, அடுத்த வாரத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

புதுச்சேரியில் மேலும் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ,  பாதிப்பு எண்ணிக்கை- 20,601.

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் :  ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழப்பு..

பசுமை பட்டாசுகளை தயாரிக்க 400 ஆலைகளுக்கு மட்டும் அனுமதி.

ராசிபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல் : ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்.




No comments

Powered by Blogger.