Header Ads

விளையாட்டு மைதானங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனோடு விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் உட்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி விளையட்டு மைதானங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் விளையாட்டு மைதானம் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் எனவும், மைதானத்துக்குள் நுழையும் வீரர்கள் கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

மைதானத்துக்குள் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.

ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பெரிய மைதானமாக இருக்கும்பட்சத்தில், பகுதி வாரியாக அனுமதிக்கலாம். அதற்கு டோக்கன் முறையை மைதான அலுவலர்கள் கையாளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீரர்கள் சொந்தமாக தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வர வேண்டும், மைதானத்தில் உள்ள கழிவறைகள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களை மைதானத்துக்குள் நுழைவதை அனுமதிக்க கூடாது எனவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைதானத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.