Header Ads

சுவையான பனானா கேக் ரெசிபி செய்வது எப்படி...

 


✍️ | மகிழ்மதி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான பனானா கேக் ரெசிபி எப்படி எளிதாக சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: வாழைப்பழ கூழ் அரை கிலோ, சர்க்கரை முக்கால் கிலோ, சிட்ரிக் ஆசிட் கால் டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், வெண்ணெய் - 125 கிராம், வெனிலா எசன்ஸ் சில துளிகள்.

செய்முறை: வாழைப்பழ கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கனமான வாணலியில் கலந்துகொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி சீராக கிளறிவிடவும். பாத்திரத்தின் ஓரங்களை விட்டு கூழானது நடுவில் உருண்டை போல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

கலர் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதை வெண்ணெய் தடவிய தட்டில் போட்டு, ஆறவிடவும். பிறகு, துண்டுகளாக வெட்டி பட்டர் பேப்பரில் சுற்றி வைத்து பரிமாறினால் சுவையான பனானா கேக் ரெசிபி தயார்!

No comments

Powered by Blogger.