உணவகங்களில் ஏசி பயன்படுத்த தமிழக அரசு அனுமதி
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
தமிழகத்தில் செயல்படக்கூடிய உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் வரும் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைகள், உணவகங்கள், ஷோரும்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் உணவகங்களில் மட்டும் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்ட அளவில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் உணவகங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.