Header Ads

மின் துறை தனியார் மயத்தை எதிர்த்து மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...


✍️ | ராஜாமதிராஜ்.

மின் துறை தனியார் மயத்தை எதிர்த்து மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தினர்  மன்னார்குடி  மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு 

தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் சு.காளிதாஸ்,  தலைமையில்

ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளரும்,அனைத்து இந்திய மின் வாரிய பட்டய பொறியாளர்கள் சம்மேளன தென் மண்டல தலைவருமான சா.சம்பத்  .மத்திய அரசு மின்சார வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும்.உத்திர பிரதேசத்தில் மின் விநியோகம் தனியார் மயத்தை எதிர்த்து போராடிய மின் வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.அனைத்து துறைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் மின்சார துறையை மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் தனியார் மயமாக்கி நாட்டின் ஆதாரத்தை குலைக்க முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.மேலும் மின் துறை தனியார் மயனானால் இலவச மின்சாரம் இரத்தாகும்,மின் கட்டணம் உயரும் அபாயம் இருக்கிறது.எனவேதான் அனைத்து மாநிலங்களிலும் மின் ஊழியர்கள்,விவசாயிகள்  மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர் என்றார். போராட்டத்தில் மின் வாரியம் தனியார் மயத்தை எதிர்த்து கோஷங்கல் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில்    சம்மேளன திட்ட செயல் தலைவர் த.ராஜகோபால், கோட்ட செயலாளர் சூ.ஜெயபால்,மத்திய அமைப்பு கோட்ட செயலாளர் ஜி.வீரபாண்டியன் ,ஐக்கிய சங்க பிரதிநிதி ஜே.முத்துமாணிக்கம்மற்றும்  அனைத்து சங்க  பொறுப்பாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மின்வாரிய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். மின் வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு

தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் சு.காளிதாஸ்,  தலைமை வகித்தார்.அகில இந்திய மின்வாரிய பட்டய பொறியாளர்கள் சங்க தென் மண்டல செயலாளர் சா.சம்பத் ,தொழிற் சங்க பிரதிநிதிகள்  சம்மேளனம் ராஜகோபால்,ஜெயபால்,மத்திய அமைப்பு சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மின் துறை தனியார் மயமாவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

No comments

Powered by Blogger.