Header Ads

திமுக தலைவர் ஸ்டாலின் வாய்தவறி மக்களை கை கழுவி விட்டதாக கூறியிருக்கிறார் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

✍️ | ராஜாமதிராஜ்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் மக்களை கைகழுவ வேண்டும் என வலியுறுத்தியதை திமுக தலைவர் ஸ்டாலின் வாய்தவறி கை கழுவி விட்டதாக கூறியிருக்கிறார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூன்றாம் சேத்தி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் அசாதாரண காலத்தில் தமிழக முதல்வர் மேற்கொள்ளும் பணிகள் மெச்சத்தக்க வகையில் அமைந்திருப்பதாக மக்கள் தெரிவிப்பதாகவும்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் 88 சதவிகிதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் மாணவ மாணவிகள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.

இத்தகைய தற்கொலைகள் மனவருத்தத்தை அளிப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் மக்க ளை கைகழுவி விட்டதாக ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தடுக்க மக்கள் அனைவரும் கைகளை கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மு. க. ஸ்டாலின் அவர்கள் வாய் தவறி மத்திய மாநில அரசுகள் மக்களை கை கழுவி விட்டதாக கூறி விட்டார் என தெரிவித்தார். 

ஓரிரு மாதங்களில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என சிலர் கூறி வரும் நிலையில் நான் நான்கு வருடங்களாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நிலைத்திருப்பதாகவும் எட்டு மாதங்கள் அல்ல 80 வருடங்கள் ஆனாலும் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.