மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வளைவு பூங்கா அமைப்பு.
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக வளைவு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு அதில் நேற்று பூச்செடிகள் நடப்பட்டன.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை அழகாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் விதமாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதையொட்டி
மன்னார்குடி பசுமைக்கரம் அமைப்பின் நிறுவனர் கைலாசம் தலைமையில் பூங்காவுக்கான பலவண்ண பூச்செடிகள் தேர்வு செய்யப்பட்டு நடவு செய்யப்பட்டது.
இதனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் என். விஜயகுமார், நிலைய மருத்துவர் கோவிந்தராஜன், மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்று பூச் செடிகளை நடவு செய்தனர்.
இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது:
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டல்படி இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருகின்ற உறவினர்களுக்கு மனதுக்கு இதமான சூழலை பூச்செடிகள் உடன் கூடிய பூங்கா ஏற்படுத்தும். மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து செல்லும் அனைத்து தரப்பு பொதுமக்களும் இதனை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
No comments