லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இல்லை. பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா நீக்கம்
செப்.13-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் வெளியீடு: செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ள 180 கேள்விகளுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி சண்முகத்தாய் மற்றும் சாந்தி தன இருந்து பெண்கள் வெடிகுண்டு வீசி மற்றும் கழுத்து அறுத்து படுகொலை 3 வயது குழந்தை செல்வி என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் விரைவு
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆட்சியர்களுடன் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தஞ்சை, திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய ஆட்சியர்கள் பங்கேற்று உள்ளனர். *
கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட செஞ்சி நெகனூரை சேர்ந்த கணிணி ஆபரேட்டர் லோகநாதன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
உளுந்தூர்பேட்டையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் விழுப்புரம் நகரமன்ற முன்னாள் திமுக கவுன்சலர் கைது.18டன் அரிசி மற்றும் லாரி பறிமுதல்
No comments