கேரளா கவர்னராகின்றாரா - எச்.ராஜா.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக தேசிய அளவில் பல பொறுப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு.புதிய தேசிய துணைத் தலைவர்கள்,பொதுச் செயலாளர்கள்,செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி .நட்டா வெளியிட்டுள்ளார்.
இதில் புதிதாக இளைஞர் அணியின் தேசிய தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த இளம் எம்.பி .தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்று தமிழக மீடியாக்கள் பெரிதும் பேசி வருகின்றனர்.
ஆனால் பாஜகவில் எப்பொழுதும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற குறிக்கோளில் செல்லும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தை சார்ந்த எச்.ராஜா இதற்கு முன்பு தேசிய செயலாளராக இருந்தார் அவரை கேரள மாநில கவர்னராக்க வாய்ப்புள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் தற்போது அவருக்கு எந்த ஒரு பதவியும் தற்பொழுது அளிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
No comments