2019-2020 ஆம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு தொகை வழங்க கோரி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை - விவசாய சங்கத்தினர் போராட்டம்.
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் செய்திருந்த பயிர் காப்பீடு மற்றும் இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தியும், ஆனைக்கொம்பன் ஈ நோயால் பயிர் பாதித்த விவசயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் விவசாய சங்கம் சார்பில் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் மன்னர்குடி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக மன்னர்குடி நகராட்சி அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் ஊர் வலமாக உதவி கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
No comments