இன்று மகாளய அமாவாசையையொட்டி வேதாரண்யம், கோடியக்கரை கடற்பகுதியில் பக்தர்கள் திதி கொடுத்து கடலில் புனித நீராடினர்.
✍️ | ராஜாமதிராஜ்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் கூட வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் மஹாளய அமாவாசையான இன்று பக்தர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களில் வந்து வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
முன்னதாக வெளி மாவட்டங்களிலிருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்தவர்களை கோடியக்காடு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர் ஒரு மணி நேரத்திற்குப் பின் அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் இதை தொடர்ந்து கோடியக்கரையில் உள்ள சித்தர் கட்ட கடலில் புனித நீராடி திதி கொடுத்தனர்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு தடைவிதித்து திருக்கோயில் அடைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி இடங்களில் காவல் துறையினர் பாதுகாக்கப்படவில்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.
No comments