Header Ads

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதாவை அமைச்சர் அன்பழகன் அறிமுகம் செய்யவிருக்கிறார்.

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* திண்டுக்கல்: கன்னிவாடியில் வாகன தணிக்கையின் போது தலைமைக் காவலர் திருப்பதியை கத்தியால்   தாக்கிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது திண்டுக்கல் எஸ்பி நடவடிக்கை.

* மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி...

* ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசின் vande bharath திட்டத்தின் மூலமாக ரூ.2,556.60 கோடி  வருவாய் வந்துள்ளது. - ஹர்தீப் சிங் பூரி.

* ரூ.107 கோடி ஜி.எஸ்.டி. மோசடி - சென்னை கொடுங்கையூரில் ஒருவர் கைது. 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

* மும்பையைச் சேர்ந்த டாடா கட்டுமான நிறுவனம் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை ரூ.861.90 கோடிக்கு கைப்பற்றியது!

* 2016 - 18 காலகட்டத்தில் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 3,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,974 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மாநிலங்களவையில் தகவல்.

* திருப்பதி எம்.பி. துர்காபிரசாத் (63) கொரோனாவால் இன்று மாலை உயிரிழப்பு..! சென்னை தனியார் மருத்துவமனையில் செப்.14-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

* கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில்.... ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்.... அதிமுக பள்ளிக்கல்வித் துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் கே.ஏ.காளியப்பன் அவர்களின் மகன் திரு செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக கழகத்தில் இணைந்தார்.... உடன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக ஒன்றிய, நகர, செயலாளர்கள் கலந்து கொண்டனர்....

* ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கின்றன-சென்னை உயர்நீதிமன்றம் வேதனை.

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடிக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய தகவல் தொலைதொடர்பு துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

எதிர்மனுதாரராக கோலி, தமன்னாவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் சேர்க்கவும், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

* அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதாவை அமைச்சர் அன்பழகன் அறிமுகம் செய்கிறார் அண்ணா பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமும், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற ஒரு நிறுவனமும் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

* மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான சட்டமுன்வடிவை இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜூ அவர்கள் தாக்கல் செய்கிறார்.

No comments

Powered by Blogger.