மன்னார்குடி அருகே ஜாமினில் வெளிவந்த வாலிபர் காட்டு பகுதியில் பிணம்!
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காஞ்சி க் குடி காடு கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற வாலிபர் விவசாய வேளை பார்த்து வருகிறார். இவர் மீது வடுவூர் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார்குடி அருகே என்பவருக்கு சொந்த மான வயல் வெளியில் உள்ள மோட்டார் காணாமல் போனது தொடர்பா க பிரபு மீது வடுவூர் போலீஸ் ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர் பாக பிரபு வடுவூர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பிரபு காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடவில்லை என கூறப்படுகிறது. பிரபுவின் உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். இந்நிலையில் காஞ்சி க் குடி காடு பகுதியில் உள்ள தைல மர காட்டி ல் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந் து அருகே சென்று பார்த்தது உடல் அழுகிய நிலையில் உயிரிழந் திருப்ப து பிரபு என தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடுவூர் போலீஸ் ஸார் மேற்கண்ட விசாரணையில் காஞ்சி குடி காடு கிராமத்தை சேர்ந்த பிரபு என்பதும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பிரபு உடல் கிடந்த இடத்தில் விஷ பாட்டில் ஒன்றும் கிடந்ததால் பிரபு கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண் டாரா எனும் கோ னத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments