Header Ads

பரிசோதனை மாதிரிகளை தவறவிட்ட களப்பணியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்.


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* சொந்த ஊரில் ஓ. பன்னீர் செல்வம் முகாம். முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்துக்கு இடையே பண்ணை வீட்டில் முகாமிட்டுள்ளார் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை தேனி பண்ணை வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர்.

* குவைத் மன்னர் ஷேக் சபாஅல் அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு. நாளை அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும். - அனைத்து துறை தலைவர்கள், டிஜிபி, காவல் ஆணையர்களுக்கு தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை.

* கூட்டணி கட்சியினரை ஒருமையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் ; வருத்தம்.

* தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இறந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு. - தமிழக அரசு.

* பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்த விவகாரம். பரிசோதனை மாதிரிகளை தவறவிட்ட களப்பணியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்.

* வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி  வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை


* உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல். கொரோனா காலத்தில் வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கும் நடைமுறையை எதிர்த்து வழக்கு. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பிரமாண பத்திரம் தாக்கல்.

* மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்- 3 பேர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெங்கடாபுரம் கிராம சுற்றுப்பகுதிகளில் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திர பகுதியிலிருந்து மிக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியை சேர்ந்த உதயகுமார் (19), ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் (19), மேகநாதன் (20) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதித்தனர். அதில் 120 கிராம் எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகளாக பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* திருவள்ளூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை.
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகையை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 34). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக புருஷோத்தமன் வயிற்றுவலி குணமாகாததால், மன உளைச்சல் அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி தவமணி (வயது 32) புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு: கடலூரில், வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
விவசாயத்தை அழித்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்தும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தில் வயலில் இறங்கி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர்.போராட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், குடியிருப்போர் சங்க செயலாளர் மருதவாணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்புராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி, நகர்க்குழு செந்தில், பக்கீரான் மற்றும் விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம், விவசாயிகள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம், வேளாண் சட்டங்களை ஆதரிக்கிற துரோகிகளை புறக்கணிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.