மாமூல் கேட்டு மிரட்டும் திமுகவின் முக்கிய பிரமுகர் - தீக்குளிக்க முயன்ற தொண்டர்!
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
சக கட்சி தொண்டரிடமே மாமூல் கேட்டு மிரட்டும் திமுகவின் முக்கிய பிரமுகர் - தீக்குளிக்க முயன்ற தொண்டர்!
நெய்வேலி பகுதியில் இறால் பண்ணையக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார் அக்கட்சியின் தொண்டர் ஒருவர். இவரதுப் பண்ணைக்கு அருகே திமுகவின் முக்கிய பிரமுகர் சொந்தமான இறால் பண்ணையும் இருந்துள்ளது.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சி உறுப்பினரிடம் 50,000 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், இறால் பண்ணையில் உள்ள ஜெனரேட்டர், மோட்டார் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க லாரி மூலம் அக்கட்சியின் தொண்டர் கொண்டு சென்றுள்ளார்.
இதனை அறிந்த முக்கிய பிரமுகர், தனது ஆதரவாளர்களுடன் தொண்டரை மிரட்டி லாரியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த தொண்டர் அருகில் உள்ள காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சொந்தக் கட்சி தொண்டரையே பணத்துக்காக மிரட்டி வரும் அந்த பிரமுகரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments