நான்கு ஊராட்சி மன்ற செயலர் காலி பணியிடங்களுக்குகான நேர்முகத் தேர்விற்கு 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
✍️ | ராஜாமதிராஜ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் காரிகோட்டை, 54 நெம்மேலி,வேட்டை திடல், தென்பாதி உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற செயலாளர் பதவிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான நேர்முக தேர்வு இன்று நடைபெற்றது.
மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஊரக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர். மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காரிகோட்டை, வேட்டை திடல், உள்ளிட்ட 4 கிராமங்களில் நடைபெறும் ஊராட்சி செயலர் பதவிக்கு 400க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் பங்கேற்றனர்
No comments