அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை அன்வர் ராஜா அந்தர் பல்டி.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
* தேனி எம்பியும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகனுமான ப.ரவீந்திரநாத் குமார் இன்று முதல் தனது பெயரை 'ப.ரவீந்திரநாத்' என்று மாற்றி உள்ளார்
* கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான் - அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுகவில் எப்போது பிரச்சினை வரும் என எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.
* தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
* சபாபதி மோகனுக்கு திமுகவில் புதிய பதவி திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்.
* தேனி மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்:
தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்; தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம்- திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
No comments