தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
* தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் தொடங்க தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கு. விவசாயம் மாநில பட்டியலுக்கு உட்பட்டதென்பதால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் - தமிழக அரசு.
* அதிமுக அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை. உடல்நிலை காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மதுசூதனன் விளக்கம்.
* தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகளும் பங்கேற்க இருப்பதாக தகவல்.
* கொரோனாவிலிருந்து குணமடைந்த நடிகை தமன்னா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
*மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.- சு.வெங்கடேசன் எம் பி.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு - மாநில சுகாதாரத்துறை.
* தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது - மாநில சுகாதாரத்துறை.
* தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 189 (66 அரசு + 123 தனியார்)
* கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 91.24% குணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் - மாநில சுகாதாரத்துறை.
* பீகாரில் முதற்கட்ட சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவரை 44 வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்
.
* 2020-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரோஜர் பென்ரோஸ், ரெனார்டு ஜென்சல் மற்றும் ஆண்ட்ரியா கீஸ் ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
* மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வலுப்படுத்துவதாக மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் விவசாயிகளிடேயே பேசும்போது குறிப்பிட்டார்.
* தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பு
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
* மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.5 ஆக பதிவு
No comments