Header Ads

பயணிகளே அரசு பேருந்துக்கு டோல்கேட் சுங்க வரி செலுத்தி திருச்சிக்கு பயணம்! அரசு போக்குவரத்து துறையின் கேவலமான நிர்வாகம்!

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

பயணிகளே அரசு பேருந்துக்கு டோல்கேட் சுங்க வரி செலுத்தி திருச்சிக்கு பயணம்! அரசு போக்குவரத்து துறையின் கேவலமான நிர்வாகம்! -தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் கண்டனம்!

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் அரசு போக்குவரத்து பேருந்து திருச்சியை நெருங்கிய நிலையில் அருகிலுள்ள சுங்கச்சாவடிக்கு சென்றபோது அரசு போக்குவரத்து பேருந்து (அரசு போக்குவரத்து விழிப்புரம் TN 21N-2070) அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியும் நெடுஞ்சாலை சுங்க வரி செலுத்தாமல் நின்ற வண்ணம் இருந்தது,

பேருந்து ஏன் செல்லவில்லை என்று ஓட்டுனர் இடமும் நடத்தினர் இடமும் பயணிகள் கேட்டபோது சுங்கச்சாவடியில் வரி செலுத்த எங்களுக்கு அனுமதி இல்லை நாங்க கட்ட முடியாது என்று சொல்லி பேருந்திலேயே அமர்ந்திருந்தார்கள் இதை அறிந்த பயணிகள் ஓட்டுனர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பின்னர் பயணிகளே  சுங்கச்சாவடியில் கட்டணத்தை செலுத்தினர், கட்டணம் செலுத்திய பின் பேருந்து புறப்பட்டது. இது போக்குவரத்து துறையின் மிக கேவலமான நிர்வாக சீர்கேட்டையே இந்த சம்பவம் காட்டுகிறது.

தமிழக அரசும் போக்குவரத்துத் துறை அமைச்சரும் போக்குவரத்துத் துறையும் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு இந்த கேவலத்தை இந்த அவலத்தை நிவர்த்தி செய்ய தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வேண்டுகோளாக தமிழக அரசுக்கு வைக்கிறேன்.  

இப்படிக்கு 

வசீகரன்

மாநிலத் தலைவர் 

ஆம்ஆத்மிகட்சி 

தமிழ்நாடு

3/10/2020

No comments

Powered by Blogger.