Header Ads

பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* கரூரில் கடந்த 18-ம் தேதி நடந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பட்டிலியனத்தைச் சேர்ந்தவர். முக்கிய எதிரியான பிரேம்குமார் மாற்று சமூகத்தவர் என்பதால் வழக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

* கன்னியாகுமரியில் கொரோனா பாதித்தவரை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றதால்தான் தந்தை குட்டப்பன் உயிரிழந்ததாகக் கூறி மகன் சிபின் ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெட்டப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பொன்ஜோஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* காரைக்கால்: காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு 19 பெட்டிகளுடன் விரைவு ரயில் புறப்பட்டன. மின்மயம் ஆக்கப்பட்ட பின் காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்தில் ரயில் இயக்கப்படுகிறது. 

* சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே ஓரத்தூரில் ரியல் எஸ்டேட் பிரமுகர் சதீஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் சதீஷை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

* ஈரோடு

உதகை மாவட்டம், தேவபேட்டா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, தனலட்சுமி தம்பதி. இவர்களின் மகள் விஜயகுமாரி (26). இவர், கடந்த ஓராண்டாக ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தீபன் என்பவருக்குச் சொந்தமான மருத்துவமனையில் தங்கி செவிலியராகப் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று குளிப்பதற்காக தண்ணீரை சூடாக்க ஹீட்டர் போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.  இதுகுறித்து, அந்தியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

* சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் வெற்றிலை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது போக்குவரத்து இயல்புநிலையில் உள்ளதால், அதன் விலை ஏறியுள்ளது. மேலும் பொதுமக்களும், கரோனாவை விரட்டிட, ஆவி பிடிக்க உதவும் பொருட்களில் வெற்றிலையும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால், வெற்றிலைகளை மக்கள் அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இவைகளால்,வெற்றிலை விலை ஏறுமுகத்தான் இருந்து வருகின்றது.

* திருப்பூர் குமரனின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

* திண்டுக்கல் அருகே SPR நகர் 2வது தெருவில் தனியாக வசித்து வரும் தமிழ்ச்செல்வி வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்கச் செயின் திருட்டு தாடிக்கொம்பு போலீசார் விசாரணை.

* விருதுநகர் ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் விருமாண்டி அளித்த புகாரின்பேரில் கேபிள் டிவி உரிமையாளர் திருப்பதியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* கடலூர்: பண்ருட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் தபால் ஊழியரை வெட்டிக் கொலை செய்த வக்கீலை போலீசார் தேடி வருகிறார்கள்.

* ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் அம்மன் கோவில் திருவிழாவில் 50 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து பறிமாறப்பட்டது.

* கன்னியாகுமரி கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் குமரி எல்லையில் கேரள போலீஸ் கெடுபிடி. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை திருப்பி அனுப்புகின்றனர். அத்தியாவசியப் பணிகளுக்காக செல்பவர்கள் மட்டுமே அனுமதி.

* தூத்துக்குடி வழக்கறிஞர்கள் திமுகவில் இணைந்தனர். கனிமொழி கருணாநிதி எம்பி. முன்னிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் தினகரன், ராகவன்,பிரிட்டோ, ஷேக்முகைதீன்,  S. பாலசுப்ரமணியன், மாரிமுத்து, கணேஷ், பேச்சிமுத்து , ராஜா மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் KM. பிரிசில்லா ஜான்ஸி தினகரன், ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுடன் திராவிடர் கழக வழக்கறிஞர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

* மேனாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவியும், மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாருமான திருமதி.ராஜாமணி தங்கபாண்டியன் அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.

* 28.10.2009-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த, அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பழைய பென்ஷன் திட்டத்திற்குள் வருவார்கள். -மத்திய அரசு உத்தரவு .

* கொரோனா சமயத்தில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டியதின் அவசியம் என்ன?: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களையும் குப்பைத்தொட்டியில் வீசுவோம்-ராகுல்காந்தி.

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். -ராகுல்காந்தி.

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 3 வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கிறோம் என்று பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

* அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறது தி.மு.க. - அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரையில் அதிமுக அம்மா பேரவையின் சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது:- 

அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறது தி.மு.க. ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டி பூசல் வரத்தான் செய்யும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது.பதவி வாங்கி உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு ஓடியபோதும் கட்சியை தொண்டர்கள் தான் காத்தனர் என்றார்.

* ஜூலை 2021-க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.

டெல்லி: ஜூலை 2021-க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐபிஎல் டி20; ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டீங் தேர்வு. 

சார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டீங் தேர்வு செய்துள்ளது. சார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பேட்டீங் தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி களமிறங்க உள்ளது.

* கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை:

கும்பகோணம்: கும்பகோணத்தில் வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமல்செல்வம் என்பவரது வீட்டில் நகையுடன் ரூ.20 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடித்தது குறித்து கும்பகோணம் தாலுக்கா காவல்நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

* ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை". “ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்யுங்கள்"-தெற்கு ரயில்வே விளக்கம்.

டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்ததால் பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் - ஐஆர்சிடிசி.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை ஆளுநரை சந்திக்கிறார்: நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல். அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ஆளுநருடன் சந்திப்பால் பரபரப்பு.

* பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.