Header Ads

இன்றைய முக்கிய செய்திகள்


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* நவ.23 முதல் பி.இ முதலாமாண்டு வகுப்புகள். - அண்ணா பல்கலை. அறிவிப்பு.

* சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 32வது நாளாகக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

* பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை.

* வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி  மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.

* சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். - தமிழக அரசு.

* கரூர்: பேனர் வைப்பதில் அதிமுக தகராறு.. கரூரில் திமுக பிரமுகர் பிரபாகர் அடித்துக்கொலை, மறியல்… போலீசார் சாதாரண வழக்காக பதிந்துள்ளனர். இதனை கண்டித்து கொலை வழக்கு பதிய கோரி திமுகவினர் கரூர் காந்தி கிராமம் மருத்துவ கல்லுாாி முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக போராட்டம் நீடித்த நிலையில் செந்தில்பாலாஜி அங்கு வந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த கரூர் மாவட்ட எஸ்பியுடன் செந்தில்பாலாஜி பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து புகார் அளித்தால் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

* இராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.6 கோடி மதிப்பிலான மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 200 கிலோ மஞ்சள், நாட்டு படகை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீஸ் கடத்தல்காரர்களை தேடி வருகிறது.

* திண்டுக்கல்: கொடைக்கானலில் முதன் முறையாக சுற்றுலா பயணிகளுக்கு தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக அடுத்த 4 நாட்களுக்கு இந்த சேவை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 6 பேர் பயணிக்க கூடிய இந்த ஹெலிகாப்டரில் 6 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது.

* சேலம் மண்டல பத்திரப்பதிவு துறை துணை தலைவர் வீட்டில் ரூ.3.20 லட்சம், 34 சவரன் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* தூத்துக்குடியில் பரோட்டா கடை உரிமையாளரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* நாமக்கல் 7 மாதங்களுக்கு பிறகு கொல்லிமலைக்கு பேருந்து சேவை தொடங்கியது. கொரோனாவால்  கொல்லிமலைக்கு கடந்த ஏழு மாதங்களாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பேருந்து சேவை தொடங்கியது.

* காஞ்சிபுரம் மாவட்டம் எடமச்சி மலைப்பகுதியில் அமைய உள்ள கல்குவாரிகளால் வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை.

* திண்டுக்கல் வெங்காய விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு வெங்காயத்தை வைத்து ஒப்பாரி போராட்டம்!

* விருதுநகர் பகுதியில் வெட்டுக்கிளி படையெடுப்பால் சோள பயிர்கள் சேதம்; பாலைவன வெட்டுகிளிகள் அல்ல என அதிகாரிகள் தகவல்.

* மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி திருப்பதி  நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு  ,  அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு.

* மதுரை அக்.22ம் தேதி தோப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சு.வெங்கடேசன் எம்.பி  குணமடைந்து வீடு திரும்பினார்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாரில் தனியார் ஆம்பூலன்ஸ் மோதி முருகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பெங்களூரில் இருந்த கொரோன நோயாளி குமரேசன் 51 என்பவர் குணமடைந்து தனியார் ஆம்பூலன்ஸ் மூலம் இளம்பிள்ளை நோக்கி வீட்டிற்கு சென்ற போது  விபத்தில் அதிர்சியடைந்த குமரேசனும் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிழ்சை பலனின்றி அவரும் இறந்தார்.

* மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு, சர்வதேச தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். சுவாமி யோககுரு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் சோலைமலை, அடையாறு டாக்டர் சீனிவாசன், தாரகை இதழின் ஆசிரியர் டாக்டர் ஜி. ஜெயபாலன் ஆகியோர் டாக்டர் பட்டங்களை, தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை தொழிலதிபரும், சென்னை தாய் மரம் அறக்கட்டளை நிறுவனருமான  சண்முகமணி உள்ளிட்டோருக்கு வழங்கினர்.

* தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா உட்பட்ட புளியங்குடி அதிமுக நகரக் கழக அலுவலகத்தில் வைத்து அரிசி மற்றும் மதிய உணவையும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் எம்எல்ஏ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புளியங்குடி நகரச் செயலாளர் பரமேஸ்வரன் பாண்டியன் ஒன்றியச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் வாசுதேவநல்லூர் பேரூர் கழக சீமான் புளியங்குடி அவைத்தலைவர் கடுவாய் முகம்மது உசேன் பொருளாளர் எஸ் பி முருகன்   மகளிர் அணி செயலாளர் ராமலட்சுமி மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் நகர சார்பு அணி நிர்வாகிகள் மாவட்ட கழக சார்பில்  நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாமனப்பள்ளி பிரிவு  சாலையில் வேகத்தடை சேதம்மடைந்து உள்ளதால் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் அதிக விபத்து ஏற்படுவதால்  சரி செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* ரெயில் பயணத்தின்போது பெண்களை பாதுகாக்க 'எனது தோழி’ திட்டம் அறிமுகம். இத்திட்டம் பெண் பயணிகள் ரயில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரை பாதுகாப்பை உறுதி செய்கிறது. பயணத்தின்போது பிரச்சனை ஏற்பட்டால் 182 எண்ணில் பெண்கள் புகார் அளித்தால் உடனடியாக உதவி கிடைக்கும்!

* மாஸ்டர் திரைப்பட தீபாவளிக்கு வெளி வர வில்லை தயாரிப்பு நிறுவனம் உறுதியாக கூறிவிட்டது.

No comments

Powered by Blogger.