Header Ads

இன்றைய (04 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம் சென்னையில் ஈக்காட்டுதாங்கல், மெரினா, நந்தனம், மந்தவெளி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை. -பருவமழை - தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்.

* மயிலாப்பூரில் கமல் போட்டி? 2021 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் முடிவு; சென்னையில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதாக தனியார் நிறுவன சர்வே தகவல்.

* கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும். வி.பி.ஆர்.மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காக வழங்க கூடாது- நீதிபதி மகாதேவன்.

* மாநில அரசின் ஒப்புதலின்றி சிபிஐ விசாரணை நடத்த தடை- கேரள அமைச்சரவையில் முடிவு.

* ‘என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை’ தில்லுமுல்லுப் பேர்வழிகளால் சில சுவரொட்டிகள் தமிழ்நாட்டின் தெருக்களில் ஒட்டப்படுகின்றன. பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பும் திராணியுமற்ற நபர்கள் என்னை இகழ்ந்து போஸ்டர்களை ஒட்டுகின்றனர். - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.

* 9முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து நவ -9ல் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது- தமிழக அரசு.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,416-க்கு விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,802-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* பெங்களூரு: தன்னைப் பற்றிய தகவலை யாருக்கும் வழங்க கூடாது என சசிகலா தாக்கல் செய்த மனுவை கர்நாடக சிறைத்துறை நிராகரித்தது. சசிகலா மனுவை கர்நாடக சிறைத்துறை நிராகரித்துள்ளதாக ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பேட்டியளித்தார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலா தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு அரசு விதிமுறை பொருந்தாது எனவும் கூறினார்.

* கடலூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிக் கூட்டத்தில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெளிநடப்பு.

* ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

* வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக செனட் சபை உறுப்பினராக திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். டெலாவர் மாகாணத்தில் போட்டியிட்ட சாரா மெக்பிரைட் என்ற திருநங்கை செனட்டர் தேர்தலில் வென்றுள்ளார்.

* தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் வரை குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?"-தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

* க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி KJR Studios KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான    க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது. அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு maruti  XL car ஐ பரிசாக அளித்தார்.

No comments

Powered by Blogger.