ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
செய்திமக்கள் தொடர்புத்துறையின் இயக்குநராக பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநராக இருந்த சங்கர் ஐ.ஏ.எஸ். ஏற்கனவே பத்திரப்பதிவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த பாஸ்கரபாண்டியன் செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக திருமதி பத்மஜாவும், சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ். முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாகவும், டாக்டர் எல். சுப்ரமணியம், கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments