உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த வந்த தாய் மகன் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!
✍ | -ராஜாமதிராஜ்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுறம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை செய்ததில் கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த சாய்ராபானு(42), அசேன்முகமது(24), என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒரே குடும்பத்தில் தாய், மகன்கள் கஞ்சா விற்பனை செய்து போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments