Header Ads

இன்றைய (05 நவம்பர் 2020) முக்கிய செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

✅மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அதே பகுதியில் உள்ள சந்தியா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரிடம் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்க முன்பணமாக 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 15 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு பத்திரம் பதிவு செய்து தராமலும் பணத்தை தராமல் இழுத்தடித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 லட்ச ரூபாயைக் கொடுத்து நிலையில் மீதமுள்ள ஐந்து லட்ச ரூபாய் தர மறுத்து மோசடி செய்ததாக ஜெயசுதா கீரத்துரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை 

__________

✅மதுரை ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த  பூல்பாண்டியன் 20வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 20முறை என 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

__________

✅மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஏடிஎம் வாசலில் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெயர் தர்மலிங்கம் என்பதும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

__________

✅திருவாரூர் மாவட்டம் வாழ வாய்க்கால்  நாகப்பட்டினம் போகும் பாதை ரவுண்டானா அருகே வாகன விபத்து ஒரு இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

__________

✅தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை. 6 பேர் கைது. 14 மணி நேரத்தில்  விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

__________

✅தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பன்னம்பாறை ஊராட்சி வடலிவிளையில் ரூ15 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் 1400 ஏக்கரில் தனியார் தொழிற்பேட்டைக்கு  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

__________

✅திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் சடையம்பதி கிராமத்தில் ஆதியூர் வழி குன்னத்தூர் சாலை சடையம்பதி பஸ் நிறுத்தம் அருகில் மின்சாரக்கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சுமார் 5 மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் மின் கம்பி சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது குன்னத்தூர் செல்வதற்கு பிரதான சாலை இது என்பதால் நிறைய வாகனங்கள் இவ்வழியே செல்கின்றனர். அதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அசம்பாவிதம் ஏற்படும் முன்பே இத்தனை சரிசெய்யவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை

__________

✅கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர், கண்ணன்புதூர், மாதவலாயம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது

__________

✅மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை பராமரிப்பு செலவாக ரூ.3 லட்சம் செலுத்த கோரிய நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்துக்கு, வனத்துறையினர் அனுப்பிய நோட்டீஸுக்கு  ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

__________

✅கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி யானையை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனத்துறையின் தனிப்படையினர் முத்தையன் என்பவரை கைது செய்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

__________

✅தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நகையை பறிக்க முயன்ற திருடனை மூதாட்டி பிடித்துள்ளார். போலீஸ் என கூறி அமிர்தவள்ளி என்ற 60 வயது மூதாட்டியிடம் திருடன் சிக்கியுள்ளான். தீபாவளி நேரத்தில் நகைகளுடன் செல்லக்கூடாது எனக்கூறி நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான் இந்த திருடன்.

__________

✅தென்காசி: சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைத் துறை பணிகளில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திமுக தொடர்ந்த வழக்கு எதிரொலியாக அதிகாரிகள் மெர்லின், வைரமுத்து, வைமுத்து, பிரின்ஸ், செல்வம், சுந்தர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

__________

✅திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் இதர பொது இடங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர பொது நிகழ்ச்சிகள் நடத்திடவும் நவம்பர் 11 வரை தடை விதித்து திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.

__________

✅சென்னை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த தனியார் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுரேஷூக்கு தீர்ப்பு வழங்கி சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

__________

✅சென்னை: பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியில் குட்காவை கடத்தி வந்த நரேந்திரன், அருண், பிரபாகரனை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.