Header Ads

கல்விச்செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் நேற்று (04.11.2020) வழங்கினார்.

* பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் அதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

* ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் ஆபத்து இல்லாத அளவுக்கு குறையாததால் பள்ளிகள் திறப்பதை வரும் 16 ஆம் தேதிக்கு திறக்க வேண்டாம் என்ற முடிவில் தமிழக அரசு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* பள்ளிக் கல்வி - குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னையில் நவம்பர் 8-ல் அறிமுக வகுப்பு.

தமிழகத்தில் தமிழில் படிப்பதை ஊக்குவிக்கவே தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

* என்.டி.சி., எனப்படும் தேசிய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான, 'சீட்' எண்ணிக்கை, 100ல் இருந்து, இரண்டு ஆண்டுகளில், 120 ஆக உயர்த்தப்பட உள்ளது' என, மத்திய ராணுவ செயலர், அஜய் குமார் கூறியுள்ளார்.

* மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

* கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செஞ்சி கல்வி மாவட்ட  கல்வித்துறையினருக்கு விழுப்புரம் CEO பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

No comments

Powered by Blogger.