இன்றைய (07 நவம்பர் 2020) இரவு முக்கிய செய்திகள்
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு - மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம். தென்னிந்தியாவில் சிறந்த மாவட்டத்திற்கான பிரிவு : வேலூர் - முதல் இடம். கரூருக்கு 2ம் இடம்.
* வைகோ அவர்களின் உதவியாளரும், எழுத்தாளருமான செ.திவான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
* காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். விருத்தாசலம் காவல்நிலையச் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். -ராமதாஸ்.
* மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 27,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தவறுதலாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது - - அமைச்சர் விஜயபாஸ்கர்.
* அக்டோபர் 1 முதல் நவம்பர் 6 வரை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் 4.29 கோடி பணம், 519 சவரன் தங்கம் 6.5 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளது. 16 அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல். போக்குவரத்து, பத்திரப்பதிவு, பொதுப்பணி,வருவாய் மாசுகட்டுபாடு, வேளாண்மை மற்றும் மின் வாரியம் ஆகிய துறைகளில் லஞ்சம் பெற்றது அம்பலம்.
* பீகாரில் இழுபறி- கருத்துக் கணிப்பு: பீகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தள கூட்டணி 116 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட மெகா கூட்டணி 120 இடங்களிலும் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய டைம்ஸ் நவ்- சி ஓட்டர் கருத்துக் கணிப்பு.
No comments